Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஎகிப்தின் போர்நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கள்..!

எகிப்தின் போர்நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கள்..!

இரண்டு எகிப்திய பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையின்படி, நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஈடாக காசா பகுதியின் கட்டுப்பாட்டை இஸ்ரேலுக்கு விட்டுக்கொடுக்கும் எகிப்திய முன்மொழிவை ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய அமைப்புக்கள் நிராகரித்துள்ளன.

“ஹமாஸ் எங்கள் மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறது, அதைச் செய்வதற்கான வழிகளை நாங்கள் எங்கள் எகிப்திய சகோதரர்களுடன் விவாதித்தோம்” என்று ஹமாஸ் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

“காசா பகுத்தியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு, காசா மக்களுக்கு உதவி அதிகரித்த பிறகு, கைதிகள் இடமாற்றம் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

Recent News