Thursday, December 26, 2024
HomeLatest Newsதையிட்டி போராட்டம் இன்று காலை மீண்டும் ஆரம்பம்..!

தையிட்டி போராட்டம் இன்று காலை மீண்டும் ஆரம்பம்..!

யாழ் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இறுதிநாளான இன்று வெசாக் தினத்தில் காலை மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு மத்தியிலும் போராட்டகாரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ள நிலையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்த மயமாக்கலினை எதிர்த்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி கடந்த புதன்கிழமை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதனை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுக்க போராட்டக்கார்கள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News