Thursday, December 26, 2024
HomeLatest Newsகல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம்!

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம்!

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

பிரதிவாதியை நோக்கி, இரண்டு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்தும், துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர், நீதிமன்றத்திற்குள் மற்றுமொரு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recent News