டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஆடம்பர அங்காடி ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி துப்பாக்கி பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட 21 வயதுடைய நபரை துப்பாக்கி ஒன்றுடன் காவல் துறையினர் கைது செய்திருப்பதாகவும், மக்கள் பதற்றத்துடன் காணப்படுவதால் தற்போது காவல் துறையினர் மக்களை அமைதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி சம்பவம் குறித்து தனது முதல் பதிவினை மேற்கொண்ட டென்மார் பிரதமர் ‘மெற்றி பிரட்ரிக்ஸன்’, “டென்மார்க் பங்கரவாத தாக்குதலுக்கு உட்பட்டிருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் மற்றவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருப்தே நமக்கு பலம். போராட்டத்தை தவிர்த்து நீதிக்கு காத்திருப்போம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள்” என தெரிவித்திருக்கின்றார்.