Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇன்று விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி- எஃப்-12 ராக்கெட்..!திருப்பதியில் விஞ்ஞானிகள் வழிபாடு..!

இன்று விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி- எஃப்-12 ராக்கெட்..!திருப்பதியில் விஞ்ஞானிகள் வழிபாடு..!

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இரண்டாவது தளத்திலிருந்து இன்று காலை ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் விண்ணில் பாய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்விஎஸ் 01 என்ற வழிகாட்டு செயற்கை கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தரை, கடல் வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்காக என்விஎஸ் 01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சுமந்தபடி செல்லும் இஸ்ரோவின் ஜிஎஸ்எல்விஎஃப் 12 என்ற ராக்கெட் வெற்றிகரமாக செல்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்றைய தினம் திருப்பதியில் வழிபாடு நடத்தியுள்ளனர்.

இந்த ராக்கெட் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் நேற்றைய தினம் தொடங்கியது என்பதும் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News