Tuesday, January 28, 2025
HomeLatest Newsபொதியொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு; நீர்கொழும்பில் பதட்டம்!

பொதியொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு; நீர்கொழும்பில் பதட்டம்!

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றுக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பொதியில் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது குண்டு செயலிழக்கும் பிரிவினரை வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து மிக அருகாமையிலேயே நீர்கொழும்பு மேயரின் வீடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News