Saturday, January 18, 2025
HomeLatest Newsபாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளேன். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சில தினங்களில் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும்.

அத்துடன் மாணவர்களின் கற்றல் நேரம் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இன்றைக்கு போக்குவரத்து பிரச்னை உள்ளது. தனியார் பஸ்கள் குறைவாக உள்ளன.

மாணவர்கள் தாமதமாக பாடசாலைக்கு வரலாம், ஆசிரியர்களும் வரலாம்
கொஞ்சம் தாமதமாக என்றாலும் பாடசாலைக்கு வாருங்கள். குழந்தை செருப்பு இல்லாமல் வந்தால் திருப்பி அனுப்பாதீர்கள். சீருடை பிரச்சனை என்றால்
கொஞ்சம் நிவாரணம் கொடுங்கள். இந்த சூழ்நிலையை நிர்வகிக்க எனக்கும் ஆலோசனை கூறுங்கள் எனவும் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
துசார இந்துனில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Recent News