Tuesday, December 24, 2024
HomeLatest Newsசர்வதேசத்திடம் பொய் கூறி நடிக்கும் அரசு – யாழில் போராட்டம்!

சர்வதேசத்திடம் பொய் கூறி நடிக்கும் அரசு – யாழில் போராட்டம்!

சர்வதேசத்தில் இடம்பெறும் முக்கியமான மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு செல்லும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் உட்பட ஏனைய பிரதிநிதிகள், இலங்கை தொடர்பிலும், தமிழ் மக்கள் தொடர்பிலும் பொய்யான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்து யாழில் இன்று இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நாவுக்கான, பிராந்திய அலுவலகத்துக்கு அண்மையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் சிவில் அமைப்புகள், பொது மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இன அழிப்பு வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டும், பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் வீட்டுக்கு போ, பொய் சொல்லாதே போன்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பீரிஸின் உருவ பொம்மை நடுவீதியில் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், ஐ.நா. பிராந்திய அலுவலகத்தில் பொது அமைப்பிகளால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Recent News