பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு மனிதாபிமான உதவியாக இந்திய மக்கள் வழங்கியுள்ள இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கு மேல் பெறுமதியான மனிதாபிமான உதவிப் பொருட்கள் நாளை(22) கொழும்பை வந்தடையும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
குறித்த உதவி தொகையில் முதல் கட்டமாக 9 ஆயிரம் மெற்றி தொன் அரிசி, 50 மெற்றி தொன் பால் மா மற்றும் 25 மெற்றி தொன்னுக்கும் மேற்பட்ட மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்கள் எனவும் அவற்றை உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.