Tuesday, December 3, 2024
HomeLatest Newsசிங்கள ,தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் எரிபொருள் பிரச்னையை தீர்ப்பதாக அரசாங்கம் அறிவிப்பு !

சிங்கள ,தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் எரிபொருள் பிரச்னையை தீர்ப்பதாக அரசாங்கம் அறிவிப்பு !

நாட்டில் தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்பு எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் 52 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது .

கொழும்பில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில் கருத்து வெளியிட்ட அவர், “நாம் புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்போம்.என கூறியிருந்தார்.

நுகர்வோர் இன்று, தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்வது பிரச்சினைக்குரியதொன்றாக உள்ளது. இதற்கமைய தற்போது எரிபொருள் தட்டுப்பாடானது வியாபாரமாக மாறியுள்ளது.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்றால் 3,500 ரூபாவுக்கு கேன்களில் எரிபொருளை வாங்கிச் சென்று 5,000 ரூபாவுக்கு விற்று விடுகின்றனர்.

முன்னர் நாள் ஒன்றுக்கு ஐயாயிரம் மெற்றிக் தொன் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று நாளொன்றுக்கு 7,000 மெற்றிக் தொன்னிலிருந்து 8,000 மெற்றிக் தொன் வரை விற்பனையாகிறது. இதுவே எரிபொருளுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம்.

தற்போது எரிபொருளுக்கான வரிசை குறைந்துள்ளது. எதிர்காலத்தில் அது மேலும் குறைய வாய்ப்புள்ளமையும் , எரிவாயு கியூ, பெற்றோல் கியூ, மின்சாரத் துண்டிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பாக மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்..

இம்மாதத்தின் இறுதிக்குள் எரிவாயு பிரச்சினையை முற்றாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் ஒரு எரிவாயு கப்பலால் 5,000 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது. ஆனால் அந்த நட்டத்தை கருதாது மக்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Recent News