Saturday, January 11, 2025
HomeLatest Newsதனது செயலகத்திற்கு செல்ல முடியாத ஒரே ஜனாதிபதி கோட்டாபய மட்டுமே!

தனது செயலகத்திற்கு செல்ல முடியாத ஒரே ஜனாதிபதி கோட்டாபய மட்டுமே!

ஜனாதிபதி செயலகத்திற்கு கூட செல்ல முடியாத ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச மட்டுமே உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு நடைமுறைக்கு சாத்தியமான எவ்வித தீர்மானங்களையும் முன்வைக்கவில்லை.

அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. அரசாங்கத்திற்கு சாதாரண பலம் மாத்திரமே உள்ளது.

அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் பிரதமருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி குழு கூட்டத்தில் 88 பேர் மாத்திரம் கலந்துக்கொண்டனர்.

மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கூட செல்ல முடியாத நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து கோ ஹோம் கோடா என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Recent News