இன்றைய காலகட்டத்தில் பலரும் பணம் என்றால் ஏடிஎம்களில் தான் பணம் எடுக்கின்றனர்.அவ்வாறு ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது சில நேரத்தில் கிழிந்த நோட்டுகள் வந்து விடும்.
அப்படி இருந்தால் எப்படி மாற்றுவது என்று பார்க்கலாம்.
கிழிந்த நோட்டுகள் ஏடிஎம்மில் இருந்து வந்தால் அதே வங்கிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தில், ஏடிஎம்மில் பணம் எடுத்த திகதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.பணம் எடுத்த பற்று சீட்டை அதனுடன் இணைப்பது அவசியம். இல்லை என்றால், உங்கள் மொபைலில் வந்த SMS விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
கிழிந்த நோட்டுகளை சம்பந்தப்பட்ட வங்கியிலேயே மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அவற்றை மாற்றித் தர முடியாது என்று எந்த வங்கியும் அறிவிக்க முடியாது. அவ்வாறு மறுக்கும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கியே நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.
எனவே உங்களுக்கு ஏடிஎம்களில் கிழிந்த பணம் கிடைத்தால் கவலைப்படாமல் அதை ஆதாரத்துடன் வங்கிக் கிளையில் விண்ணப்பித்து புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.