Monday, December 23, 2024

நல்ல தூக்கம் ரொம்ப முக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் ஆழ்ந்த உறக்கம் என்பது மிக முக்கியமானது. இந்த தூக்கத்தில் பிரச்சனை இருந்தால் நீங்கள் தூங்குவதற்கு போராடினால் நடு இரவில் விழிப்பு வந்தால் நீங்கள் பகலை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். நீங்கள் இரவு முழுவதும் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு நிபுணர் தரும் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

தினமும் 9 மணிக்கு காலை உணவை உட்கொண்டால் இந்த நேரத்தில் உடல் பசியின் அறிகுறிகளை கொடுக்க தொடங்கும். அதே போல் தினசரி இரவு 10 மணிக்கு தூங்கும் பழக்கத்தை கொண்டு மறுநாள் காலை 7 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை கொண்டால் இந்த நேரத்தை உடல் பழகிக்கொள்ளும். இடையில் விழிப்புக்கு வேலை இருக்காது.

தூக்கமே இல்லை என்றோ தூக்கமின்மை பிரச்சனை அதிகமாக எதிர்கொள்பவர்களுக்கோ தூக்க மாத்திரையை மருத்துவரே பரிந்துரைப்பதுண்டு. இதனால் உடலை அதிக மறுசீரமைக்க உதவும். உங்கள் சப்ளிமெண்ட் மெலடோனின் இல்லாமல் இருக்கட்டும். இது ஆழ்ந்த தூக்கத்தையும் புத்துணர்ச்சியுடன் உங்கள் விடியலையும் உண்டாக்கும். மனம் மற்றும் உடல் இரண்டையும் அமைதிப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர பசி பிரச்சனை உங்களுக்கு இருந்தால் புரதம் நிறைந்த உணவுகள் அவசியம் தேவை. தினசரி அழுத்தமானது இரத்த சர்க்கரை குறைவை உண்டாக்கலாம். இதனால் பசியும் எரிச்சலும் உண்டாகலாம். உறங்கும் போது இது பொதுவானது. மனம் அன்றைய நிகழ்வுகள் மற்றும் அடுத்த நாள் குறித்து எண்ணங்களுடன் அலை மோதும். அமைதியான உறக்கத்தை அனுமதிக்கும் அளவுக்கு கார்டிசோல் அழுத்த அளவுகள் குறைவதை இன்னும் கடினமாக்கும்.

மேலும் இதனைப் பற்றி அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos