Tuesday, December 24, 2024
HomeLatest Newsமாணவர்களிற்கு மகிழ்ச்சி செய்தி - விலை குறையும் புத்தக பைகள் மற்றும் காலணிகள்..!

மாணவர்களிற்கு மகிழ்ச்சி செய்தி – விலை குறையும் புத்தக பைகள் மற்றும் காலணிகள்..!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைப்பதற்கு விற்பனையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள், ரூபாவின் பெறுமதி அதிகரித்த போதிலும் மீண்டும் குறைக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

மேலும் உற்பத்தியாளர்களை தமது பொருட்களை குறைந்த விலையில் சந்தைக்கு வழங்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி முதல் புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலைகளை குறைப்பதற்கு விற்பனையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News