கனடாவில் குடிப்பெயர விரும்புவோருக்கு அந்நாட்டு அரசாங்கம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு குடிப்பெயவர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்க உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆண்டுகளாக வெளிநாட்டு குடிப்பெயர்வாளர்களுக்கு அதிகளவு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டை விடவும் கடந்த 2022ம் ஆண்டில் கூடுதல் எண்ணிக்கையில் குடிப்பெயர்வாளர்கள் கனடாவில் குடியேறியுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டில் கனடாவில் புதிதாக 431645 பேர் நிரந்தர வதிவிட உரிமை பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் ஆளணி வளப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையில் கூடுதல் எண்ணிக்கையில் வெளிநாட்டுப் பிரஜைகள் குடியேறுவதற்கு சந்தர்ப்பம வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டில் 465000 குடிப்பெயர்களுக்கும், அடுத்த ஆண்டில் 485000 குடிப்பெயர்வாளர்களுக்கும், 2025ம் ஆண்டில் 500000 குடிப்பெயர்வாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
நாட்டில் குடியேறும் வெளிநாட்டுப் பிரஜைகள் தொழிற்சந்தையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதடன் புதிய திறமைகளை கொண்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு அமைச்சர் சீன் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குடிப்பெயர்வாளர்கள் பலர் தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் வரையில் நீண்ட காலம் காத்திருக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.