கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட நிர்மாண வேலைத்திட்டங்கள் தொடர்பில் செலுத்த வேண்டிய பணத்தின் ஒரு பகுதி செலுத்தப்பட உள்ளதாக இலங்கை தேசிய நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது.
முதலில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டட நிர்மாணிப்பாளர்களுக்கே இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.
இதன்படி, குறித்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டிட நிர்மாணிப்பாளர்களுக்கு இம்மாதம் 10 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான நிர்மாண வேலைத்திட்டங்கள் தொடர்பான தாமதமான பில்கள் 195 பில்லியன் ரூபாவை அரசாங்கம் வசூலிக்க வேண்டியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.