Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கையிலுள்ள இந்திய உயர்மட்ட வர்த்தகர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

இலங்கையிலுள்ள இந்திய உயர்மட்ட வர்த்தகர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் உயர்மட்ட வர்த்தகர்களுக்கு, ஐந்து வருட காலத்திற்கான வீசா வழங்கப்பட்டுள்ளது

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரானாவினால், குறித்த வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானியகராலயம் அறிவித்துள்ளது

குறித்த வீசா திட்டம் இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிக்க உதவும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பங்லே, கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோவை சந்தித்து, வர்த்தகத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

இலங்கையுடனான வர்த்தக நடவடிக்கைகளுக்காக, உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, இந்திய உயர்ஸ்தானியகராலயம் தெரிவித்துள்ளது

இதேவேளை, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் உணவுத் துறை அமைச்சருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்

இதன்போது, உணவுப் பதப்படுத்தல் மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்களை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக இந்தயாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Recent News