Wednesday, December 25, 2024
HomeLatest Newsமக்களிற்கு அடித்த அதிஷ்டம்...!அனைவருக்கும் இலவச சன்ஸ்க்ரீம்...!நெதர்லாந்து அதிரடி...!

மக்களிற்கு அடித்த அதிஷ்டம்…!அனைவருக்கும் இலவச சன்ஸ்க்ரீம்…!நெதர்லாந்து அதிரடி…!

தற்பொழுது அதிகரித்து வரும் தோல் புற்றுநோயிலிருந்தும் மற்றும் சூரியக் கதிா்வீச்சிலிருந்தும் மக்களை பாதுகாக்கும் நோக்குடன் இலவச இலவச சன்ஸ்க்ரீம் வழங்கப்படவுள்ளது.

சன்ஸ்கிரீம் திரவங்களை இலவசமாக வழங்குவதை நெதா்லாந்து அரசே தீர்மானித்துள்ள நிலையில் உலகளாவிய ரீதியில் மக்கள் வியந்து வருகின்றனர்.

அவற்றினை நாட்டு மக்களிற்கு விநியோகிப்பதற்காக கல்வி நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் போன்ற பொது இடங்களில் சன்ஸ்கிரீம் திரவ விநியோக மையங்களை நிறுவுவதற்கு அந்நாட்டு அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டு நெருக்கடி நிலவிய காலத்தில் கிருமி நாசினிகளை பொது மக்களுக்கு விநியோகிப்பதற்காக பயன்படுத்திய சாதனங்களை இதற்கும் உபயோகிக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒவ்வொருவரும் சூரிய பாதுகாப்பை அணுக வேண்டும் என்றும், செலவு அல்லது சிரமம் போன்ற காரணிகளால் பாதிக்கப்படக் கூடாது என்று அரசாங்கம் விரும்புகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News