Saturday, April 26, 2025
HomeLatest Newsபெரிய வெங்காயத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்!

பெரிய வெங்காயத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்!

விசேட பண்ட வரி வீதத்தை குறைக்க உணவு கொள்கை குழு பரிந்துரைத்துள்ளதால் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் வெங்காயத்திற்கான தேவை வருடத்திற்கு சுமார் 300,000 மெட்ரிக் டன் ஆகும். இதில் இறக்குமதிகள் மூலம் 86% பூர்த்தி செய்யப்படுகிறது.

வெங்காய தேவையில் 14 சதவீதமானவற்றை பூர்த்திசெய்ய உள்நாட்டு உற்பத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 290 – 390 ரூபாவாகவும் கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 340 – 400 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News