Thursday, December 26, 2024
HomeLatest Newsஇந்திய பரா தடகள போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்!

இந்திய பரா தடகள போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்!

குறிப்பாக,இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற 4ஆவது இந்திய திறந்த நிலை 2022ஆம் ஆண்டுக்கான தேசிய பரா தடகள போட்டியின் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இலங்கை பரா தடகள வீராங்கனை ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவரது குறைபாடு டி47 வகைப்பாட்டின் கீழ் வருகிறது.

இது ஒரு கையில் குறைந்த முதல் மிதமான அளவில் இயக்கம் அல்லது கை கால்கள் இல்லாததால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான பிரிவாகும்.

மேலும் இந்த போட்டியில் தனஞ்சனா 5.01 மீற்றர் மற்றும் 690 புள்ளிகளை தாண்டி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

இதேவேளை, இதே போட்டியில் டி46 வகைப்பாட்டின் கீழ் இலங்கையின் பாரா தடகள வீராங்கனை குமுது பிரியங்கா 4.71 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Recent News