Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsசெய்யும் தொழிலே தெய்வம்..!சாமி கும்பிட்ட பின்னர் பணத்தை ஆட்டைய போட்ட திருடன்..!

செய்யும் தொழிலே தெய்வம்..!சாமி கும்பிட்ட பின்னர் பணத்தை ஆட்டைய போட்ட திருடன்..!

கடை ஒன்றில் திருட சென்ற நபர் ஒருவர், சாமி கும்பிட்ட பின்னர் திருடி சென்ற சம்பவம் அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.

இச்சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சாலை, சுங்குவார்சத்திரம் சந்தை அருகே இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் 32 வயதான ராஜ்குமார் என்ற நபர் கட்டுமான தேவையான பொருள்கள் விற்பனை விற்பனை நிலையத்தினை நடத்தி வருகின்றார்.

வழமை போன்று வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்ற பின்னர் மறுநாள் காலை வந்து கடையை திருந்து பார்த்த வேளை 1.08 லட்சம் ரூபாய் பணம் திருடுப் போனமையால் ராஜ்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால், அவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்
கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்துள்ளனர்.

அதில், வெள்ளை நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் இரவு 12.30 மணியளவில் கடைக்குள் நுழைந்தமை தெரிய வந்துள்ளது.

அவ்வாறு வந்தவர், பணப்பெட்டியை திறந்து பார்த்த வேளை அதற்குள் சாமி படம் இருந்துள்ளது. இதனால் அதனைத் தொட்டு கும்பிட்ட பின்னர் பணத்தை திருடி சென்றுள்ளார்.

இந்த காட்சிகள் அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளதுடன், அந்த காணொளிகளை அடிப்படையாக கொண்டு பொலிஸார் திருடனைத் தேடி வருகின்றனர்.

Recent News