Tuesday, December 24, 2024
HomeLatest News7 ஆண்டுகளாக ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமி! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

7 ஆண்டுகளாக ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமி! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ஜேர்மனியில் 8 வயது சிறுமி குறைந்தது 7 ஆண்டுகளாக வீட்டின் ரகசிய அறையில் அடைக்கப்பட்டு வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய், தாத்தா, பாட்டி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது தாய் தந்தையின் வீட்டில் இருக்கும் சிறுமியின் தாய், தற்போது 8 வயதாகவும் மகளை கடந்த 7 ஆண்டுகளாக வீட்டின் ரகசிய அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

என்ன நடந்தது – எப்படி என்பதைத் தீர்மானிக்க வழக்கறிஞர்கள் இப்போது முயற்சி செய்கிறார்கள். தாய் மற்றும் தாத்தா பாட்டி மூவரும் இந்த வழக்கில் மௌனம் சாதித்ததாகவும், இதில் அவர்களது உள்நோக்கத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குழந்தை பிறப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன்பே குழந்தையின் தந்தையிடமிருந்து அவரை விலக்கி வைக்க தாய் முயற்சி செய்திருக்கலாம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

குழந்தையில் இருந்தே சிறுமி வெளியுலகத்தையே பார்த்ததில்லை, அவருக்கு காடு, புல்வெளி என எந்த நிலப்பரப்பும் தெரியவில்லை. சிறுமி வேறொரு வெளி நபருடன் தொடர்பு கொள்ளவில்லை, பள்ளிக்குச் சென்றதில்லை.

ஆனால், அவர் உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவராகவோ இல்லை என்று கூறப்படுகிறது.

உள்ளூர் குழந்தைகள் நலத் துறையின் தலைவரான மைக்கேல் ஃபார்பர் கூறுகையில், சிறுமியால் கணிதம் படிக்கவும் முடியும், ஆனால் அன்றாடப் பணிகளில் சிரமப்படுகிறார். எல்லாம் எப்படி வேலை செய்கிறது என்பதை அவர் முதலில் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் தற்போது குழந்தை உளவியல் நிபுணர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிறுமியின் குழந்தைக்கு உலகம் இப்போது தலைகீழாக உள்ளது. அவர் வேறொரு கிரகத்தில் இருப்பது போல் உணருவார் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.  

பிற செய்திகள்

Recent News