ஆனையிறவில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளவர்கள் அதனை பாதுகாப்பதற்கு ஒரு சிறப்பான படையையும் ஒழுங்கமைக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்
மருதங்கேணி மாசார் எல்லை பகுதியில் அமைந்துள்ள.மருத ஈசுவரர் ஆலயத்தில் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
நீங்கள் இங்கு ஒரு சிலை வைத்திருக்கிறீர்கள் ஆனால் இந்த சிலையை பாதுகாக்கவும் ஒரு படையை வைத்திருக்க வேண்டும்.
பாரிய ஒரு பிரதேசமாக 3000 ஆண்டுகளிற்கு மேலான நாகரீகத்தை உடைய நாம் ஆலயங்களில் வழிபடும் பொழுது அடுத்தநாள் அந்த சிலை இருக்குமா என்று நினைத்துக் கொண்டே வழிபடுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், நாட்டினுடைய கலாசாரம் அவ்வாறே வளர்க்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
எமக்கு புத்தர் மீது எந்த கோபமும் கோபமும் கிடையாது. தமிழர்களும் பௌத்தர்களாக இருந்துள்ளனர். ஆனால் சிங்களவர்களிற்கு முன்னரே பேசப்பட்டது எமது தமிழ் மொழி என்றும் சைவர்களின் காலை, கலாசாரம் , இறை நம்பிக்கை மற்றும் தெய்வங்கள் என்றும் அனைத்தும் அதற்கு முன்னராகவே வளர்த்தெடுக்கப்பட்டது எனவும் கூறினார்.
சைவர்களின் ஆலயங்கள் அழிக்கப்படுவது மாத்திரமன்றி தமிழினம் என்பதுடன் வடபகுதியினை குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் என்ற ஒன்றினை வர்த்தகம் செய்து இனஅழிப்பு மேற்கொள்ளபடுவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.