Monday, December 23, 2024
HomeLatest Newsரத்த வெள்ளத்தில் கிடந்த ஜிபி முத்து! நடந்தது என்ன?

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜிபி முத்து! நடந்தது என்ன?

சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய சகோதரர், தன்னை பிளேடால் வெட்டியதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ஜிபி முத்து.டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து, இவரது தமிழ் பேச்சுக்காகவே இளைஞர்கள் மத்தியில் வைரலானார்.

தலைவரே என இவரை கொண்டாடவும் தொடங்கிவிட்டனர், இப்படியே பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார்.

இந்த புகழ் மூலமே பிக்பாஸ் சீசன் 6 வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது, ஆரம்பம் முதலே ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக வலம்வந்த போதும், மகனை பார்க்காமல் இருக்கமுடியவில்லை, எனக்கு குடும்பமே முக்கியம் எனக்கூறி வெளியேறினார்.

தனக்கு பணம், புகழை விட தன் மகன் தான் முக்கியம் என கூறிய ஜிபி முத்துவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சரமாரியாக பிளேடால் வெட்டிய சகோதரர்
இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் ஜிபி முத்து சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

அதில், சில வருடங்களுக்கு முன்பு நானும் என்னுடைய சகோதரரும் ஒரே இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுக்குள் ஒரு பிரச்சனை எழ, கோபத்தில் என் சகோதரர் பிளேடால் என்னை வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த என்னை நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினர்.

Recent News