காஸாவில் நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் இன்று காலை முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வடக்கு காஸாவில் இருந்து தெற்கு நோக்கி வெளியேறிய மக்கள் தற்போது தங்களது குடியிருப்புகளை நோக்கி மீண்டும் வடக்கு காஸா நோக்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் அந்த மக்களை வடக்கு நோக்கி செல்ல வேண்டாம் என்று இஸ்ரேல் துண்டு பிரசுரங்களை வீசி எச்சரித்து வருகின்றது. ஏற்கனவே போர் இடைநிறுத்தம் அறிவிக்கப்பட முன்னர் தற்காலிக போர் இடைநிறுத்ததின் போது தெற்கில் உள்ள மக்கள் யாரும் வடக்கு நோக்கி செல்ல வேண்டாம் என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்தின் பின்னர் போர் மீண்டும் தொடரும் என்றும் எங்களுடைய இலக்குகளை அடையும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என்றும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்தும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்து.