வடக்கு காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் இராணுவம் காஸாவின் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.
சிதைந்த மற்றும் முழுமையான சடலங்கள் ராபா எல்லையில் அடக்கம் செய்யப்படுவதற்காக வாகனத்தில் எடுத்து வரப்பட்டுள்ளன.
நீண்ட அகழி போல தோண்டப்பட்ட குழியில் நீல நிற பையில் அடைக்கப்பட்ட உடல்கள் அடுக்கப்படும் படங்களை ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புல்டோசரில் கொண்டுவரப்படும் உடல்கள் அந்த அகழியில் வரிசையாக அடுக்கப்பட்டு பின்னர் புதைக்கப்படுவது உலகில் வாழும் மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 240 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20915 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் சம்பவங்களை நினைவுபடுத்துவதாக போரில் அகப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.