Tuesday, January 28, 2025
HomeLatest Newsஐரோப்பாவில் எரிவாயுவின் விலை ரொக்கட் வேகத்தில் அதிகரிப்பு

ஐரோப்பாவில் எரிவாயுவின் விலை ரொக்கட் வேகத்தில் அதிகரிப்பு

கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா தனது இறுதி குழாய் வழி எரிவாயு வழங்கலை முற்றாக நிறுத்தியிருப்பதுடன் ஐரோப்பாவில் எரிவாயுவின் விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது ஏற்படுத்தியிருந்த தடை காரணமாக ஐரோப்பாவிற்கான எரிவாயு வழங்கலை நிறுத்தப்போவதாக தொடர் அறிவித்தல்களை வெளியிட்டு வந்த ரஷ்யா, கடந்த வெள்ளிக்கிழமை குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக மேற்படி வழங்கலை முற்றாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பாவிற்கான எரிவாயு இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் விலைகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த விலைகள் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கு ம் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Recent News