Monday, January 27, 2025
HomeLatest Newsயாழில் நீண்ட நாள் கஞ்சா வியாபாரம்- சந்தேக நபர் அதிரடியாக கைது!

யாழில் நீண்ட நாள் கஞ்சா வியாபாரம்- சந்தேக நபர் அதிரடியாக கைது!

நீண்ட காலமாக காங்கேசன்துறை வீதி மற்றும் கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தை மேற்கொண்டு வந்த நபர் ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுபவர் எனவும் தெரிய வந்துள்ளது.

அந்த நிலையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலே இன்று (17) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு தொகுதி கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Recent News