Friday, January 24, 2025
HomeLatest Newsஇத்தாலிக்கு ஆட்கடத்தும் கும்பல் - இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!

இத்தாலிக்கு ஆட்கடத்தும் கும்பல் – இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!

இலங்கையர்களை லெபனான் ஊடாக படகுகள் மூலம் இத்தாலிக்கு கடத்திச்செல்லும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சட்டவிரோதமாக இலங்கையரை இத்தாலிக்கு கடத்திச்செல்லும் ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் ஆபத்தான பயணம் குறித்து இலங்கையின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கி தமது உயிரைப்பணயம் வைத்து பணத்தை வீணடிக்க வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 24 மணி நேரமும் இயக்கத்திலுள்ள 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது பணியகத்தின் விசாரணைப்பிரிவின் 0112864214 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.  

Recent News