Tuesday, December 24, 2024
HomeLatest NewsG7 அமைப்புக்களுக்கிடையே ஒன்றிப்பு வேண்டும்!

G7 அமைப்புக்களுக்கிடையே ஒன்றிப்பு வேண்டும்!

G 7 நாடுகளின் கூட்டத் தொடர் நேற்று ஜேர்மனியில் ஆரம்பமாகிய நிலையில் அதில் உரையாற்றிய ஜேர்மனி அதிபர் ‘ஒலாவ் ஸ்கூல்வ்’, ” ரஷ்யாவின் தாக்குதல்களால் உக்ரைன் சின்னாபின்னமாகிப் போயுள்ளது.

தற்போது தலைநகர் கெய்வில் மக்கள் குடியிருப்புக்கள் மீதும், தாக்குதல் நடாத்தி வருகின்றது.

மக்களை வெளியேற்றுவதில் தொண்டு நிறுவனங்கள் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் G 7 நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உக்ரைனுக்கு தேவையான வழிகளில் உதவிகளை வழங்க முன்வர வேண்டும். ரஷ்ய அதிபர் தொடர்ந்தும் தலையிடியை கொடுத்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றார். ஆனால் நாம் உதவிகளை வழங்க வேண்டும்”. என தனது ஆரம்ப உரையில் தெரிவித்திருக்கின்றார்.

Recent News