Saturday, January 25, 2025
HomeLatest Newsஎரிபொருளில் மலர்ந்த கள்ளக்காதல்-குடும்பப் பெண் தப்பியோட்டம்!

எரிபொருளில் மலர்ந்த கள்ளக்காதல்-குடும்பப் பெண் தப்பியோட்டம்!

நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இவ்வாறாக காத்திருக்கும் மக்கள் வரிசைகளில் பல்வேறு காதல் பரிமாற்றங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில் எரிபொருள் வரிசையில் நின்ற 52 வயது பெண்ணொருவர், எரிபொருள் பெறுவதை கைவிட்டு, காதலுடன் ஓடிய சம்பவம் ஒன்று பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் பொல்பித்திகம பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான குறித்த பெண் , மூன்று பிள்ளைகளையும் கணவனையும் கைவிட்டு, திருமணமான நபர் ஒருவருடன் சென்றுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கள்ளக்காதலுடன் சென்ற பெண் வீட்டில் இருந்து 2 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்அதேவேளை அவருடன் சென்ற கள்ளக் காதலன் அவர் பொறுப்பில் இருந்த பசுக்கள் அனைத்தையும் 22 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent News