Friday, December 27, 2024
HomeLatest Newsநாளை முதல் எரிபொருள் டோக்கன் முறை அறிமுகம்! – எரிசக்தி அமைச்சர்

நாளை முதல் எரிபொருள் டோக்கன் முறை அறிமுகம்! – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் உதவியுடன் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

இதன்போது கைத்தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் கிடைத்தவுடன், அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அதன்பின்னர் அவர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recent News