Sunday, January 19, 2025
HomeLatest Newsஎரிபொருள் தட்டுப்பாடு- திருப்பி அனுப்பப்படும் விமானங்கள்!

எரிபொருள் தட்டுப்பாடு- திருப்பி அனுப்பப்படும் விமானங்கள்!

சென்னை, டுபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கான மாற்றுத் தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவிற்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சென்னை மற்றும் ஏனைய இந்திய விமான நிலையங்களில் இருந்து தனது விமானங்களுக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்து இயங்குகிறது என விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் இந்திய அதிகாரிகளுடன் முன்னதாகவே கலந்துரையாடப்பட்டதென்றும் அவர் கூறினார்.

டுபாய் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்யும் பணியில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News