Friday, December 27, 2024
HomeLatest Newsஎரிபொருள் கொள்வனவு; சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

எரிபொருள் கொள்வனவு; சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் துறைகள் தொடர்பான அறிக்கையை தயாரிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவ்வாறு தயாரிக்கும் அறிக்கையை 2022 ஜூலை 12 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

Recent News