நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் எரிவாயு நெருக்கடி நிலை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையிலும் இன்று வரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் நோக்கில் எரிபொருள் விநியோகம் மேலும் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித,
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் கப்பலுக்கு தாமதக் கட்டணமாக பாரிய தொகை செலுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.