லிட்ரோ எரிவாயு நிறுவனம் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
லிட்ரோ எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு கிடைக்கும் இடங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு தகவல்கள் வழங்கும் வகையில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் மொபைல் செயலி அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த செயலியை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, கையடக்க தொலைபேசி மூலம் நுகர்வோர், முகவர்கள் மற்றும் துணைமுகவர்கள் தகவலைப் பெற முடியும்.
வரிசையில் நிற்பதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் திகதி மற்றும் எண்ணிக்கைகள் குறித்து அந்த பகுதி முகவர்களிடம் கேட்டு தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முடியும் என்றும் நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.