Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅபராதம் விதிக்கப்பட்ட விரக்தி..!2 வேன்களையும் மொட்டை மாடியில் நிறுத்திய நபர்..!

அபராதம் விதிக்கப்பட்ட விரக்தி..!2 வேன்களையும் மொட்டை மாடியில் நிறுத்திய நபர்..!

நபர் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் 2 வேன்களைகளையும் நிறுத்தி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தைவான் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

அந்த நாட்டில் குறித்த நபருக்கு குடியிருப்பின் வாசல் பகுதியில் வேனை நிறுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஆத்திரமடைந்த அவர் தனது வீட்டின் குறுகலான மொட்டை மாடியில் தன்னுடைய 2 வேன்களையும் பார்க்கிங் செய்துள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள நிலையில்,
அதை பார்த்து அதிர்ந்த பயனர்கள், எதற்காக மொட்டை மாடியில் வேன்களை நிறுத்தி உள்ளீர்கள்? என்றும் எவ்வாறு வேன்களை மொட்டை மாடிக்கு எடுத்து சென்றீர்கள்? என்றும் வினவியுள்ளனர்.

அதற்கு அவர், தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட ஆத்திரத்தில் கிரேனை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் 2 வேன்களையும் மொட்டை மாடியில் நிறுத்தி வைத்தாக கூறியுள்ளார்.

அத்துடன், இந்த புகைப்படங்கள் வேகமாக வைரலானதை தொடர்ந்து, அதிகாரிகள் அவரிடம் மாடியில் இருந்து வேன்களை இறக்குமாறு கூறியுள்ளனர்.

ஆயினும், அவர் இந்த கட்டிடம் ஸ்டீல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டது என்பதால் 2 வாகனங்களின் எடையை தாங்கும். ஆகவே இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

Recent News