Tuesday, December 24, 2024
HomeLatest Newsபிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டம்..!வான் சாகசத்தில் இந்திய விமானப்படை..!

பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டம்..!வான் சாகசத்தில் இந்திய விமானப்படை..!

பிரெஞ்சுப் புரட்சியின் நினைவாக ஜூலை 14 ஆம் திகதி பாஸ்டிள்ளே டே கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அந்த நிகழ்வில் இந்திய விமானப்படையும் பங்கேற்கவுள்ளது.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில், 4 இந்திய ரபேல் விமானங்களும் மற்றும் இதர போர் விமானங்களும் அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளன.

இதற்காக, இந்திய விமானப்படையின் 72 பேர் கொண்ட தனிக்குழு ஒன்று பாரீசுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

அத்துடன், ஹெலிகாப்டர் அணிவகுப்பிற்கு ஹெலிகாப்டர் பைலட்டான சிந்து ரெட்டி என்பவர் தலைமை வகிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதாவது, இரண்டு உலகப்போர்களின் போதும் இந்திய போர் விமானங்கள் பிரான்ஸ் வானத்தில் பறந்தமையை நினைவுபடுத்தும் விதமாக இந்திய விமானப்படை, பிரான்ஸ் விமானப்படையுடன் வான் சாகசத்தில் ஈடுபடவுள்ளது.

மேலும், ரபேல் உட்பட ஏராளமான விமானங்களை பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News