Wednesday, December 25, 2024
HomeLatest Newsதொல்லை அழைப்புகளில் இருந்து விடுதலை...!வட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய அம்சம்...!

தொல்லை அழைப்புகளில் இருந்து விடுதலை…!வட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய அம்சம்…!

வட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை சத்தமின்றி அமைதியான முறையில் வைக்கும் (Silence Unknown Callers) வகையிலான புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், பயனாளர்கள் தமக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் தெரியாத நபர்களின் தொல்லை அழைப்புகளில் இருந்து தப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அம்சம், வட்ஸ்அப் பயனர்களுக்கு வரும் தெரியாத அழைப்புகளை அமைதியான முறையில் வைக்கின்றது. இந்த அம்சத்தை செயற்படுத்துவதன் மூலம் ரிங்க்டோன் ஒலி ஒலிக்காது.

அதாவது பயனர்களின் அழைப்பு விபர (conduct details) பட்டியலில் இல்லாத எண்களில் இருந்து வரும் அனைத்து அழைப்புகளும் அமைதியான முறையில் (Silent mode) இருக்கும். அதேநேரத்தில் இந்த அழைப்புகள் நோட்டிபிகேஷனில் டிஸ்பிளே ஆகும்.

பயனாளர்கள் இதை வட்ஸ்அப்பில் ‘செட்டிங்ஸ் > பிரைவசி > கால்ஸ் > Silence Unknown Callers என செயற்படுத்த வேண்டும்.

அண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் இதை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News