Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஏழு நாடுகளுக்கு இலவச விசா!!!

ஏழு நாடுகளுக்கு இலவச விசா!!!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று (26) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது,இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.

மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசா விவகாரம் குறித்து அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், விசா அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​​​30 நாள் ஒற்றை நுழைவு விசா கணினியில் கிடைக்கவில்லை என்பது சிக்கல். இது நடைமுறைக்குரியது அங்கு ஒரு பிரச்சினை இருந்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.இது குறித்து நிதிக்குழு அறிக்கை அளித்திருந்தால், நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம். இருப்பினும், ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தினை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent News