Tuesday, December 24, 2024
HomeLatest Newsமிரிஹான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி! ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

மிரிஹான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி! ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

ஜனாதிபதியின் இல்லத்திற்கு எதிரே அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு தொடர்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சிலர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய போராட்டம் எந்த அரசியல் தலையீடும் இல்லாத மக்கள் போராட்டம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தி உதவிகளை வழங்க முன்வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Recent News