Wednesday, March 5, 2025
HomeLatest Newsஎரிபொருள் வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து மோசடி

எரிபொருள் வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து மோசடி

எரிபொருள் தட்டுப்பாடுக்கு மத்தியில், வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாம் எரிபொருளை பெற்றுத்தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

எனவே, குறித்த வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும், அவர்கள் குறித்த தகவல்கள் அறிந்திருப்பின் தமக்கு அறியப்படுத்துமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மகரகம பகுதியில் இடம்பெற்ற இவ்வாறான மோசடி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent News