Thursday, January 23, 2025
HomeLatest Newsபிரான்ஸில் இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

பிரான்ஸில் இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

பிரான்ஸில் ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

அதன்படி குறிப்பாக சிறுவர்கள் குறித்த இணையத்தளங்களை பார்வையிடுவதைத் தடுப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

‘age certification system என அழைக்கப்படும் புதிய நடை முறை ஒன்றை அனைத்து ஆபாச இணையத்தளங்களும் தங்களது தளத்தின் முகப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும், அதனைக் கடந்ததன் பின்னரே இணையத்தளத்தை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேற்படி புதிய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் நிபந்தனைகள் இதுவரை முழுமையான வடிவம் பெறவில்லை எனவும், அது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

Recent News