Tuesday, December 24, 2024
HomeLatest Newsமுன்னாள் பிரதமர் உயிரிழப்பு..!பல நாட்டுத் தலைவர்களும் இரங்கல்..!

முன்னாள் பிரதமர் உயிரிழப்பு..!பல நாட்டுத் தலைவர்களும் இரங்கல்..!

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சில்வியோ பெர்லுஸ்கொனி, தொழிலதிபரும் பெரும் பணக்காரரும் ஆவர்.

இவர் 1994 ஆம் ஆண்டு முதல் 95 வரையிலும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை இத்தாலியின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

தற்பொழுது 86 வயதான சில்வியோ பெர்லுஸ்கொனி வயது முதிர்வு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட சில்வியோவிற்கு சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறியிருந்தார்.

ஆயினும், வயது முதிர்வு காரணமாக 86 வயதான சில்வியோ இன்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறாக இவர் உயிரிழந்தமைக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News