Friday, November 15, 2024
HomeLatest Newsமுன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருட சிறை தண்டணை..!

முன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருட சிறை தண்டணை..!

எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ பூனஸ் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருக்கு கடமைகளிலிருந்து விலகிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிக் குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ பூனஸிக்கு 14 ஆண்டுகளும் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் முங்குயாவிற்கு 18 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருந்த அவர், தேர்தல் இலாபத்திற்காக திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவுடன் தொடர்புகளை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி தற்போது நிகரகுவாவில் வசித்து வருவதுடன் 2019 ஆம் ஆண்டு அவருக்கு அந்நாட்டு பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டது.

நிகரகுவா பிரஜையொருவர் வெளிநாடொன்றில் குற்றவாளியாக காணப்பட்டாலும் அவரை அந்த நாட்டிடம் ஒப்படைக்காமல் இருப்பதற்கான சட்டதிட்டங்களே நிகரகுவாவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News