Tuesday, December 24, 2024
HomeLatest Newsமுன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்!

முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்!

முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட் காலமானதாக வாடிகன் சனிக்கிழமை அறிவித்துள்ளது. அவருக்கு 95 வயது.

கடந்த 2005 ஏப்ரல் மாதம் முதல் 2013 பிப்ரவரியில் அவர் பொறுப்பில் இருந்து விலகும் வரையில் பாப்பரசராக பதவியில் இருந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை போப் பிரான்சிஸ் விடுத்த வேண்டுகோளில், முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் கடுமையான சூழலில் உள்ளார் எனவும், அவருக்காக கத்தோலிக்க மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சனிக்கிழமை, டிசம்பர் 31ம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக வாடிகன் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜேர்மானியரான பாப்பரசர் பெனடிக்ட் மதச்சார்பற்ற ஐரோப்பாவில் கிறிஸ்தவத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றார், ஆனால் 600 ஆண்டுகளில் முதன்முறையாக தமது பதவியை ராஜினாமா செய்த முதல் போப்பாண்டவராக என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

2013 பிப்ரவரி 11ம் திகதி குறித்த முடிவகை அறிவித்த பாப்பரசர் பெனடிக்ட், 1.3 பில்லியன் கிறிஸ்தவ மக்களை வழி நடத்தும் உடல் நிலையில் தாம் இல்லை என குறிப்பிட்டார். இதனையடுத்து புதிய பாப்பரசராக பிரன்சிஸ் தெரிவானார்.

Recent News