Saturday, January 25, 2025
HomeLatest Newsபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது...! 8 பேர் உயிரிழப்பு...!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது…! 8 பேர் உயிரிழப்பு…!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் சில பகுதிகளில் பலத்த பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளதாகவும், எச்சரிக்கை நோட்டீஸ்களும் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால், அதன் பிறகுதான் முன்னாள் பிரதமர் நிரபராதி என்று நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

Recent News