Tuesday, December 24, 2024
HomeLatest Newsபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது..!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்துள்ளனர்.

Recent News