தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பயன்படுத்திய கார் சுமார் 40 ஆண்டுகளாக பயன்படுத்தாது காமராஜர் அரங்கில் தூசி படிந்தபடி காணப்பட்டது. குறித்த இக் காரை வெறும் ஒரு.மாத காலத்திற்குள் கிருஸ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் அதன் பழமை மாறாமல் புதுப்பித்துள்ளார். இது பற்றி அஸ்வின் ராஜ் தெரிவிக்கையில், குறித்த முப்பது நாட்களும் வண்டியுடன் செலவழித்ததை விட.ஐயாவுடன் செலவழித்தோம் என்று தான் கூற முடியும். புதுப்பித்ததன் பின்னர் மக்களின் பார்வைக்காக ஒரு நாட்களே காட்சிப்படுத்த முடிந்தாலும் சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் வந்து பார்வையிட்டுச் சென்றனர். இதேவேளை பெருந்தவைவர் காமராஜர் பெரும் சரித்திரமாகக் காணப்படுவதால் அவர் பயன்படுத்திய வாகனமும் வருங்காலத்திற்கான சரித்திரமாகும். காலத்திற்கும் இந்த கார் அழியக்கூடாது ன்பதற்காகவே இதைப் புதுப்பித்தோம். எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் இக் கார் ஈபிஎஸ் குழுமத் தலைவர் சுந்தரத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. MDT 2727 என்ற எண்ணைக் கொண்ட காரில் தான் காமராஜர் தமிழகமெங்கும் சென்று பணியாற்றினார். 1954 ம் ஆண்டு தமிழக முதல்வரான பிற்பாடுமஅரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தாது இக் காரையே பயன்படுத்தி வந்ததுடன் முதல்வர் பதவிக்காலம் நிறைவுற்றதன் பின்னரும் இதே காரையே பயன்படுத்தி மக்கள் பணியாற்றினார். இதன் பின் சுமார் 40 ஆண்டுகளாக காமராஜர் அரங்கில் பாவனையற்று இருந்த நிலையில் காரானது தற்பொழுது பழமை மாறாமல் மீள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது கையெழுத்தானது காரின் கண்ணாடிப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.