Monday, January 27, 2025
HomeLatest Newsபாகிஸ்தானில் முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டுக்கொலை! 

பாகிஸ்தானில் முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டுக்கொலை! 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கரன் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் முன்பாக Muhammad Noor Meskanzai மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த நீதியரசர் அருகில் இருந்த வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர காயம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

ஷரியா விற்கு எதிரான ரிப்பா – அடிப்படை வங்கித்திட்டத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதியரசர் இவர் எனவும், பல விடயங்களில் மிகவும் துணிவுடன் நீதியை நிலைநாட்டுவதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட துணிச்சல் மிக்க ஒரு நீதியரசரின் இழப்பு இது எனவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் தாக்குதலை மேற்கொண்ட குழு யார் என்பது தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்து உள்ளது. 

Recent News